அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: திமுக தலைமை கழக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை, 11/9/2026: தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடைத்தேர்தல் பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்து வழிநடத்த முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க. சுந்தர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழக பொறுப்பாளர்களுடன் அருகில் உள்ள கழக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து, கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக முழு வீச்சில் அயராது பாடுபட வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன