அரசியல்

ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதா? இப்போதைக்கு தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் ரூ. 1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தற்போதைய சூழலில் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் பகுதி, காலம் காலமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியாகும். அங்கு பள்ளிகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் அரசு தவிக்கும் இத்தருணத்தில், மேலும் கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது முற்றிலும் தேவையற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களுக்குப் பாதிப்பும் இல்லாத மாற்று இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும், தமிழகத்தின் நிதிநிலை சீரடைந்த பின்னர் பொருத்தமான இடத்தில் இதனைத் திட்டமிடலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், மக்கள் நலப் பிரச்னைகள் நிலவும் சூழலில் இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன