அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்!

சென்னை, செப். 10:

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் இ.பரந்தாமன் மற்றும் வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை கழக அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது வேட்பாளர்கள் இருவரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் களப் பணிகள் குறித்தும் தலைவருடன் அவர்கள் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வின் போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன