அரசியல்

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மதுராந்தகம் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன்!

சென்னை: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் இ. பரந்தாமன், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்தச் சந்திப்பின் போது, கழகத்தின் தேர்தல் களப் பணிகள் குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வேட்பாளராகக் களமிறங்கும் இ. பரந்தாமனுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன