தேசியம்

எகிப்து பிரமிடுகள் மீது வான்வழியே சீறிப்பாய்ந்த இந்திய விமானப்படையின் ‘சாரங்’ ஹெலிகாப்டர்கள்: மெய்சிலிர்க்க வைத்த சாகசம்!

புதுடெல்லி: எகிப்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிசா பிரமிடுகள் பின்னணியில் அமைய, இந்திய விமானப்படையின் ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகசக் குழுவினர் நிகழ்த்திய வான்வெளி சாகசக் காட்சிகள் சர்வதேச பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

எகிப்தில் நடைபெற்று வரும் 2-வது எல் அலமெய்ன் சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்றுள்ளது. இதில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4 ஏ.எல்.ஹெச் துருவ் (ALH Dhruv) ஹெலிகாப்டர்கள் ஒன்றிணைந்து, கிசா பிரமிடுகளின் மேல் வானில் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் அணிவகுத்துப் பறந்து கண்கவர் சாகசங்களை நிகழ்த்தின. இந்தியாவின் வான்வெளித் திறனையும் எகிப்தின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் இணைக்கும் வகையிலும், இரு நாடுகளிடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த வான் சாகசம் அமைந்திருந்தது.

இந்நிகழ்வையொட்டி, இந்திய விமானப்படையின் மெயின்டனன்ஸ் கமாண்ட் ஏஓசி-இன்-சி ஏர் மார்ஷல் யல்லா உமேஷ், எகிப்தில் முகாமிட்டுள்ள ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகசக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவங்களை விமானப்படை வீரர்கள் அவருடன் பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன