தமிழ்நாடு

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம்: பரமக்குடியில் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து புகழஞ்சலி!

பரமக்குடி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகநீதிப் போராளியுமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 69-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அங்குள்ள தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. எஸ். ராஜேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. (SC) துறை தலைவர் திரு. ரஞ்சன் குமார், மாவட்டத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன