தேசியம்

ஆப்கானிஸ்தானுக்கு உயிர்காக்கும் மருத்துவப் பொருட்கள்: இந்தியாவின் தொடர் மனிதாபிமான உதவி!

புதுதில்லி:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் அடங்கிய புதிய உதவித் தொகுப்பை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தேவையான பல்வேறு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை தேவைகளுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சை அளிக்கத் தேவையான முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இந்த உதவித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நெருக்கடியான காலகட்டங்களில் அண்டை நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் மனிதாபிமான அணுகுமுறையின் கீழ் இந்த மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காபூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களும் ஏழை எளிய நோயாளிகளும் பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன