தட்டாஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் காலாப்பட்டு திமுக எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டம்: ஜெகத்ரட்சகன், இரா.சிவா வாழ்த்து!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தின் இடையே, காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அ. செந்தில் (எ) ரமேஷ் அவர்களின் பிறந்தநாளை திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் மற்றும் மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டப்பட்டு எம்.எல்.ஏ. செந்தில் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ந. தங்கவேலு, தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம், இந்திரா நகர் பொறுப்பாளர் பசுபிக் சங்கர், சைதை மோகன், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், பி.சா. இளஞ்செழியப்பாண்டியன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் த. முகிலன், சிறுபான்மை அணி அமைப்பாளர் முகம்மது ஹாலிது, விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் மற்றும் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



