புதுச்சேரி

மலேசியாவில் ம.இ.கா. தலைவர்களை சந்தித்த காமராஜ் நகர் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்: ‘ரைசிங் புதுச்சேரி’ புத்தகம் வழங்கி மரியாதை!

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) தலைமை அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் சென்று தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

மலேசிய இந்திய காங்கிரஸின் அழைப்பின் பேரில் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மலேசிய இந்திய காங்கிரஸின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் அவருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பான முறையில் கௌரவித்தார்.

இந்த சந்திப்பின்போது மலேசிய இந்திய காங்கிரஸின் தேசிய துணைத் தலைவரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசியத் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் ம.இ.கா செயற்குழு உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான எதிர்கால தொலைநோக்கு திட்டங்களை உள்ளடக்கி தாம் உருவாக்கியுள்ள ‘ரைசிங் புதுச்சேரி’ (Rising Puducherry) என்ற புத்தகத்தை ம.இ.கா தலைவர்களுக்கு எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கி வாழ்த்து பெற்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன