தேசியம்

இமாச்சலில் தனியார் பேருந்து விபத்து: 7 பேர் பலி, 11 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தின் சாம்பா மாவட்டத்தில் தனியார் பேருந்து சாலையை விட்டு விலகிக் கீழே உள்ள சாலையில் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுராஹ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திஸ்ஸா காவல் நிலைய எல்லையில் உள்ள பேராகர்-திஸ்ஸா சாலையின் சாலுஞ்ச் மோர் பகுதியில் இன்று காலை சுமார் 7.15 மணிக்கு இந்த விபத்து நடந்தது. பேராகரிலிருந்து சாம்பா நோக்கிச் சென்ற பேருந்து, வளைவான மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிப் பலமுறை உருண்டு கீழே உள்ள சாலையில் விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்குத் திஸ்ஸா அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, அவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சாம்பா பண்டிட் ஜவாஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன