புதுச்சேரி
மணவெளி தொகுதி ஞானமேட்டில் ரூ.46.54 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி: எம்எல்ஏ ராமு துவக்கி வைப்பு
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி ஞானமேடு கிராமத்தின் உட்புறச் சாலைகளை சிமெண்ட் கான்கிரீட் சாலையாக மாற்ற பொதுப்பணித்துறை சார்பில் ரூ.49.80 லட்சத்தில் திட்டமிடப்பட்டு ரூ.46.54 லட்சம் மதிப்பீட்டில் அரசாணை பெறப்பட்டது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞானமேட்டில் நடைபெற்றது. மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலைப் பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பீனாராணி, உதவிப் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
In brief (English)
Manavely MLA Ramu performed the Bhoomi Puja for constructing a cement concrete road at Gnanamedu at an estimated cost of Rs 46.54 lakh. PWD officials and local residents participated in the event.