தமிழ்நாடு
தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: 200 ஏக்கர் வனப்பகுதி சாம்பல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள லட்சுமிபுரம் பின்புறம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. ஊரடி ஊத்துக்காடு மற்றும் வீரபயனார் கோவில் காடு ஆகிய இடங்களில் பற்றிய தீ வேகமாக பரவி 200 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியை அழித்தது. செங்குத்தான மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கினர். இதில் விலைமதிப்பற்ற மரங்களும் மூலிகை செடிகளும் எரிந்து சாம்பலாகின. வனவிலங்குகள் இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
In brief (English)
A major wildfire broke out in the Western Ghats near Periyakulam in Theni district, gutting over 200 acres of forest land. Forest officials faced difficulties controlling the flames due to the rugged terrain.