தமிழ்நாடு

தேனி டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபானம் விற்பனை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய வாடிக்கையாளருக்கு காலாவதியான பாட்டில் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாட்டிலில் காலாவதி தேதி 2025 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகள் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

In brief (English)

A controversy erupted at a government TASMAC liquor outlet in Theni district after a customer was reportedly sold an expired liquor bottle. A video of the altercation between the customer and shop employees went viral online.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *