தமிழ்நாடு
கும்பகோணத்தில் மாங்காய்களை தரையில் உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும் மற்றும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் கையில் கொண்டு வந்த மாங்காய்களை தரையில் அடித்து உடைத்தனர். மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் கேன்களுடன் மற்றொரு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
In brief (English)
Farmers in Kumbakonam staged a protest outside the RDO office by smashing mangoes on the ground, demanding a minimum support price and cold storage infrastructure. Dairy farmers also joined the protest seeking higher milk procurement rates.