தமிழ்நாடு

சென்னை திருவொற்றியூரில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற விரைவு ரயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலும் திருவொற்றியூர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்தன. ஓட்டுநர்கள் உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு ரயில்களை முன்கூட்டியே நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில் சேவைகள் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

In brief (English)

A major train disaster was averted near Thiruvottiyur in Chennai when an express train and a local train ended up on the same track facing each other. Alert drivers applied emergency brakes in time, preventing a head-on collision.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *