புதுச்சேரி

தென்னிந்தியாவை கலக்கிய ‘திரீரோஸ்’ பெண் திருட்டு கும்பல் புதுச்சேரியில் கைது

தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில் திருவிழாக்கள் மற்றும் துணிக்கடைகளில் மக்கள் கவனத்தைத் திருப்பித் திருடி வந்த ‘திரீரோஸ்’ பெண் திருட்டு கும்பலை புதுச்சேரி பெரியக்கடை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்சி, லட்சுமி ஆகிய 3 பெண்கள் சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள துணிக்கடைகளில் திருடிவிட்டு புதுச்சேரிக்கு தப்பி வந்தனர். அண்ணா சாலையில் உள்ள துணிக்கடையில் இருந்த அவர்களை புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மீதான வழக்குகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் சென்னை மாம்பலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

In brief (English)

Puducherry police arrested three women belonging to the ‘Three Rose’ gang wanted for serial shoplifting and theft in Tamil Nadu and Andhra Pradesh. The suspects were handed over to the Chennai police for further investigation.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *