புதுச்சேரி
காமராஜர் நகரில் ரூ.23.38 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ஜிஞ்சர் ஹோட்டல் அருகே உள்ள வெள்ளைவாரி வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கியது. லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பொன்னியம்மன் கோவில் முதல் சங்கம புள்ளி வரை உள்ள கருவடிக்குப்பம் வடிகாலை ஓராண்டு காலம் பராமரிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.23.38 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. பொதுமக்கள் குப்பைகளை வாய்க்காலில் கொட்டாமல் முறையாகப் பிரித்து வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார்.
In brief (English)
Ahead of the rainy season, Kamaraj Nagar MLA John Charles Martin inaugurated canal desilting work worth Rs 23.38 lakh to prevent waterlogging in the constituency.
