புதுச்சேரி

ஜிப்மரில் 64 எம்பிபிஎஸ் இடங்களை பூர்வகுடி மாணவர்களுக்கே வழங்க தமிழ் தேசிய பேரியக்கம் மனு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 64 எம்பிபிஎஸ் இடங்களை மாநிலத்தின் பூர்வகுடி மாணவர்களுக்கே முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பாக ஜிப்மர் துணை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் குடியிருப்போர் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இச்சலுகையைப் பெறுவதால் உள்ளூர் மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாக அமைப்பின் செயலாளர் வேலுசாமி குற்றம் சாட்டினார். மேலும், ஜிப்மரில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை டெல்லி எய்ம்ஸ் மூலம் நிரப்பாமல் பழையபடி ஜிப்மர் நிர்வாகமே நேரடியாக நிரப்பி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

In brief (English)

Tamil Desiya Periyakkam submitted a petition to the JIPMER Deputy Director demanding that all 64 MBBS seats reserved for Puducherry be allotted strictly to native students and local job recruitment be restored.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *