மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்: அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மத்திய பிரதேசத்தில் பாசிப்பயிரை 100% கொள்முதல் செய்ய வேண்டும் மற்றும் உர விநியோகத்தை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போபாலில் பேரணியாக சென்றனர். முதலமைச்சர் மோகன் யாதவ் வீட்டை முற்றுகையிட முயன்றபோது காவல்துறை தடுப்புகளை மீற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வேளாண் அமைச்சர் ஜெடேல் சிங் ஹன்சாவுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 60% பாசிப்பயிரை கொள்முதல் செய்யவும், மின்னணு டோக்கன் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
In brief (English)
Farmers in Madhya Pradesh ended their agitation demanding minimum support price for moong crops after successfully negotiating with the state government. The government agreed to procure 60 percent of the crop and suspend the electronic token system temporarily.