புதுச்சேரி

புதுச்சேரி காவலர்களுக்கு விருதுகள் வழங்கி எல்.ஜி. கைலாசநாதன் வாழ்த்து

புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான சேவையைப் பாராட்டி நடைபெற்ற காக்கியுடை காவலர்கள் விழாவில் துணைநிலை ஆளுநர் K. கைலாசநாதன் கலந்து கொண்டார். குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது புதுச்சேரி காவல்துறைக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய கௌரவம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கண்காணிப்பு அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சைபர் குற்றங்களைத் தடுக்க ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை காவலர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க காவலர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

In brief (English)

Puducherry Lieutenant Governor K. Kailashnathan attended the police award ceremony to honour officers and highlighted the importance of using AI and technology to fight crime. He also urged police personnel to strictly curb drug abuse.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *