புதுச்சேரி

வில்லியனூரில் சுதந்திர தின விளையாட்டுப் போட்டி: அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தேசியக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

புதுச்சேரி: வில்லியனூர் மணவெளியில் நடைபெற்ற சுதந்திர தின விளையாட்டுப் போட்டியில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வில்லியனூர் மணவெளியில் உள்ள நம்மவர் விளையாட்டு திடலில், நம்மவர் விளையாட்டு கழகம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன், குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விளையாட்டு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன