புதுச்சேரி

இஎஸ்ஐ திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு இஎஸ்ஐசி மருத்துவமனை, 15 மருந்தகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பு 2020-ன் கீழ் இஎஸ்ஐ மண்டல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், மண்டல வாரிய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்றும், இஎஸ்ஐ பயனாளிகள், தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழில்முனைவோர் தங்களது ஆலோசனைகளை வழங்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

In brief (English)

Puducherry Minister Malladi Krishna Rao reviewed ESI operations and instructed officials to seek public and union feedback within 45 days.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன