புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியை மேம்படுத்த அசோக் ஆனந்த் துணை நிற்பார்: அதிமுக அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செயின்பால் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், “தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் எப்போதும் உடன் நிற்கும் வேட்பாளர் அசோக் ஆனந்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது மக்களின் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சிறந்த நல்லாட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஆட்சி செய்வதற்கு தகுதியான ஒரே தலைவர் ரங்கசாமி மட்டுமே. ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால், அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உடனுக்குடன் பெற்றுத் தரப்படும். தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர் தொடர்ந்து துணை நிற்பார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தொகுதிக்குட்பட்ட செயின்பால் பேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் அசோக் ஆனந்த் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்கு அப்பகுதி பெண்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த வேட்பாளர், தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன