தமிழ்நாடு

தமிழகம் வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் உற்சாக வரவேற்பு!

சென்னை, செப். 5: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவரை, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.

ராஜ்மோகன் அவர்கள் நேரில் சந்தித்துப் பூங்கொத்து வழங்கி முறைப்படி வரவேற்றார். தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்க உள்ள நிலையில், அவரது வருகையை ஒட்டிப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன