தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 8 வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே இடி மின்னல் தாக்கமும் உணரப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கமான இயல்பு வெப்பநிலையை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன