தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் வெளியிட்டார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்களின் நீட் மதிப்பெண்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கென தனித்தனி பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களது தரவரிசை மற்றும் கலந்தாய்வு விவரங்களை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnmedicalselection.net தளத்தில் அறிந்துகொள்ளலாம். முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன