புதுச்சேரி
அரியாங்குப்பத்தில் இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில், பழனிவேல் என்பவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற ராஜாத்தி என்ற மூதாட்டி, ஃப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.