புதுச்சேரி

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் பாரம்பரியத்தை விளக்கும் சுவர் ஓவியங்கள்: நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு!

புதுச்சேரி: ‘தூய்மையே சேவை’ (Swachhata Hi Seva) பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி சார்பில் கம்பன் கலையரங்க வளாகத்தில் கலை மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான சிறப்பு சுவர் ஓவியங்கள் வரையும் பணி முன்னெடுக்கப்பட்டது.

கம்பன் கலையரங்க சுற்றுச்சுவர்களில் வரையப்பட்டுள்ள இந்த கண்கவர் ஓவியங்கள், புதுச்சேரியின் தொன்மை வாய்ந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் முக்கிய அடையாளங்களை வண்ணமயமாக காட்சிப்படுத்துகின்றன. பொது இடங்களை அழகுபடுத்துவதுடன், பொதுமக்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணிகளை, உள்ளாட்சித் துறை இயக்குனர் ம. ஆதர்ஷ், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கே. பி. ஸ்ரீஜித் மற்றும் நகராட்சி நல அதிகாரி டாக்டர் வி. ஆர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுவர் ஓவியங்களை அழகுற வரைந்து பொது இடத்திற்குப் புத்துயிர் ஊட்டிய கலைஞர்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் பங்களிப்பையும் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர். தூய்மை உணர்வையும் கலாச்சாரப் பெருமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த சுவர் ஓவியங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன