தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தீவிர வாக்குச்சேகரிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அசோக் ஆனந்தனை ஆதரித்து, முதல்வர் ந. ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின் போது திலகர் நகர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்த தலைவர்கள், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கி, வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.



