புதுச்சேரி

புதுச்சேரி சாரம் பூங்குளம் புனரமைப்பு: ரூ.19.82 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

புதுச்சேரி:
புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த பூங்குளத்தைப் புனரமைத்து புதுப்பிக்கும் பணிகளுக்காக, ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 800-க்கான நிதியுதவி காசோலையை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கியுள்ளார்.

நீர்வளங்களைப் பாதுகாக்கவும், பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பணிகளுக்கான காசோலையை, ‘நமது தோள்கள் அறக்கட்டளை’ அறங்காவலர் திரு. வீரசுதன் அவர்களிடம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முறைப்படி வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, கோயில் நிர்வாக அலுவலர் பொன். நீலகண்டன் மற்றும் எல்.ஜே.கே. (LJK) அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். சாரம் பகுதியில் உள்ள இந்த பழமையான குளத்தைச் சீரமைப்பதன் மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, சுற்றுச்சூழல் மேம்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன