தமிழ்நாடு
தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 10 முதல் 14 வரை தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கான வாய்ப்பு தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
