தமிழ்நாடு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: மின்வாரியத்திற்கு ₹7,432 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் உழவர்கள் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்ய இலவச மும்முனை மின்சார சேவை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, 2026-27ஆம் ஆண்டில் இலவச மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ₹7,432 கோடியே 58 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு தொகையும் தொடர்ந்து வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றும் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
In brief (English)
The Tamil Nadu government has allocated Rs 7,432.58 crore to TANGEDCO to continue providing uninterrupted free three-phase electricity to farmers. The state also pledged continued support through crop insurance and disaster relief.