தமிழ்நாடு

பூவிருந்தவல்லி தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

சென்னை பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரத்தில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.

விழாவில், படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இளம் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிய அவர், எதிர்கால சவால்களை எதிர்கொண்டு தேச வளர்ச்சிக்குத் தங்களின் அறிவாற்றலையும் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கல்வி மட்டுமே ஒரு மனிதனின் நிலையை உயர்த்தும் உன்னத சக்தி என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பட்டங்களை பெற்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன