தமிழ்நாடு

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்து வழிபட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கரூர்:
கரூர் மாவட்டத்தின் மிக முக்கிய ஆன்மீகத் திருவிழாக்களில் ஒன்றான தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, பக்தர்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தார்.

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர். ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்ற முழக்கங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வில் பொதுமக்களுடன் இணைந்து தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பெருமான் பெருமாளின் திருவருளால் பொதுமக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று, வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் நிகழ்வின் போது தனக்கு அன்பான வரவேற்பு அளித்த பொதுமக்களுக்கும் ஆன்மீகப் பெருமக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன