தமிழ்நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: மீனவர்கள் வரும் 29-ம் தேதி மாபெரும் போராட்டம் அறிவிப்பு!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 29-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பட்டினப்பாக்கம் பகுதியை தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், மீனவர்கள் அதிகம் வசிக்கும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்கள் பாதிக்கப்படும் என்றும், தீவிர போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது குறித்து மீனவர் கிராம பஞ்சாயத்து சபா ஒருங்கிணைப்பாளர் விஜயன் தெரிவிக்கையில், “ஏழை மற்றும் மீனவ மக்களின் வீட்டுமனைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக தலைமைச் செயலகம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனை கண்டித்து வரும் 29-ஆம் தேதி எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நயினார்குப்பம் வரையிலான 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர்” என்று தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன