புதுச்சேரி

புதுச்சேரி வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 பைக்குகள், செல்போன்கள் பறிமுதல்!

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஆரியபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வில்லியனூர் காவல் நிலைய போலீசார் ஆரியபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 பேர் குழுவாக அமர்ந்திருந்தனர். ரோந்து போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கஞ்சா பாக்கெட்டுகள் சிக்கின. இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகள், 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் நாசர், ஜெகதீஷ், நசீர், சூர்யா மற்றும் யோகநாத் என்பது தெரியவந்தது. மேலும், இதில் நாசர் என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன