தமிழ்நாடு

சென்னை ‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் ஆய்வு!

சென்னை, செப். 23:

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (செப். 23) நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மின் நுகர்வோர் சேவை மையத்தின் வாயிலாக மாநிலம் முழுவதிலும் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின்தடை, புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்தும், அவற்றின் மீது மின்சார வாரிய அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.

பொதுமக்களின் புகார்கள் மீது எவ்வித தாமதமும் இன்றி உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை அனைத்துப் பகுதிகளிலும் உறுதி செய்ய வேண்டும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன