அரசியல்
திருமாவளவனின் 65-வது பிறந்த நாள்: சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை, ஆக. 17: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமாவளவனுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திருமாவளவனுக்கு “உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரில் சென்றும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


