காரிமங்கலம் 1200 ஆண்டுகள் பழமையான அருணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மலையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிதா குஜாம்பாள் சமேத அருள்மிகு அருணேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
காரியமங்கலம் மலை மீது அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான சிவாலயத்தில் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சௌமியா அன்புமணி, 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் அப்பகுதி பொதுமக்களுடனும் பக்தர்களுடனும் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



