புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கடைசி நாளில் முக்கிய வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் மனுத்தாக்கல்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைவதையொட்டி, பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஆதரவாளர்களுடன் வந்து விறுவிறுப்பாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஐந்து முக்கிய கட்சிகள் களம் காண்கின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்து, திமுக சார்பில் சேது செல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் முடிவடைந்தது. வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக கோரிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன