ஏ.ஆர்.ரஹ்மான் தந்தையின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய அபிராமி: இணையத்தில் நெகிழ்ச்சி பதிவு!

சென்னை: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையின் நினைவேந்தல் நிகழ்வில் பாடுவதற்கு விடுத்த அழைப்பை ஏற்றுப் பாடியதாக அபிராமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையும் இசையமைப்பாளருமான ஆர்.கே.சேகரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றுப் பாடுவதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்ததாக அபிராமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்பற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து அவரது தந்தையின் நினைவேந்தல் நிகழ்வில் பாடுவதற்கு அழைப்பு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே சென்று மனதார பாடுவீர்கள் அல்லவா!” என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நினைவேந்தல் நிகழ்வில் தான் பாடிய வீடியோ காட்சி விரைவில் வெளியாகும் என்றும் அவர் ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



