கனிமவள தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு முதல்வருக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கனிமவளப் பொருட்கள் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி. சதீசன் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். கனிமவளப் பொருட்கள் கிடைக்காததால் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார். இந்தத் தடையால் தென்னிந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Kerala Leader of Opposition V.D. Satheesan has written a letter to Tamil Nadu Chief Minister requesting the lifting of restrictions on mineral resource transport from Tamil Nadu to Kerala. Satheesan expressed concern that the ongoing ban has stalled crucial National Highway construction projects in Kerala. He highlighted that any delay in these infrastructure initiatives could adversely impact regional economic growth across Southern India.
