தேசியம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ல் இருந்து 38-ஆக உயரும். நீதித்துறை செயல் திறனை அதிகரிக்கவும், தேங்கிக்கடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை விரைவில் குறைக்கவும் இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

In brief (English)

Parliament approved a bill expanding the Supreme Court judge capacity from 34 to 38 to reduce pending court cases.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *