புதுச்சேரி

உருளையன்பேட்டை சண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு மகா சண்டி யாகம்: அக்டோபர் 17-ல் தொடக்கம்!

புதுச்சேரி, அக். 5:
புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளந்தாங்கி ஐயனார் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 27-ம் ஆண்டு மகா சண்டி யாக விழா வரும் அக்டோபர் 17-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது.

விழாவையொட்டி அக்டோபர் 17-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாத்ருகா சக்தி வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து சப்தசதீ பாராயணம், லட்சுமி ஹோமம், சண்டி ஆவாஹன பூஜை, அத்யாய ஹோமம், மங்கள திரவிய சமர்ப்பணம், வஸுத்தாரை மற்றும் மகா பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடைபெறவுள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு யோகினி பைரவ பூஜை மற்றும் பலிவிதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான அக்டோபர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது. பின்னர் பகல் 12 மணிக்கு மகா சண்டியாகம், சண்டிகைக்கு விசேஷ பூஜை, வடுக, கன்யா, சுவாஸினி, தம்பதி, பிரம்மச்சாரி பூஜைகள், வஸுத்தாரை மகா பூர்ணாஹுதி ஆகியவை விமரிசையாக நடைபெறும். நிறைவாக ஸ்ரீசண்டிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக அதிகாரி மதிஒளி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பக்தர்கள் இணைந்து சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன