புதுவை ஹாக்கி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு: தலைவராக வரதராஜ், பொதுச்செயலாளராக அரவிந்தன் நியமனம்!
புதுச்சேரி, அக். 5:
புதுச்சேரி மாநில ஹாக்கி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் தனியார் விடுதியில் தேர்தல் விதிகளுக்குட்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இத்தேர்தலில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அபய் நந்தன் அம்பல்சுதா செயல்பட்டு தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தினார். மேலும், ஹாக்கி இந்தியாவின் (Hockey India) அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக செந்தில் ராஜ்குமார், பூஷன் மற்றும் புதுவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதல்வர் ராமலிங்கம் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாகப் பங்கேற்று பணிகளைப் பார்வையிட்டனர்.
இதில் ஹாக்கி சங்கத்தின் புதிய தலைவராக வரதராஜ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக ரவிச்சந்திரன், தயாளன், இளவரசி ராஜசேகரன் ஆகியோரும், பொதுச் செயலாளராக அரவிந்தன், பொருளாளராக சந்திரசேகர், இணைச் செயலாளர்களாக அன்பழகன் மற்றும் ஷாலினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் அருண்குமார், ஜெயசெல்வக்கொடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேசன், கார்த்திகேயன், ரம்யாதேவி மற்றும் விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகளாக ஹரிகிருஷ்ணன், ராதிகா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

