காரைக்கால்

நிரவி வள்ளலார் மடத்தில் பூச நட்சத்திர மகா தீபாராதனை & அன்னதானம்: எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் பங்கேற்பு!

காரைக்கால், நிரவி சமரச சன்மார்க்க சங்க வள்ளலார் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் மடத்தில், வள்ளலார் அவதரித்த பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மகா தீபாராதனை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

வள்ளலார் பெருமானின் அவதார தினமான பூச நட்சத்திர நாளையொட்டி, நிரவி சமரச சன்மார்க்க சங்க மடத்தில் உள்ள ராமலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜைகள் பக்தி சிரத்தையுடன் நடைபெற்றன. ஆன்மீக மற்றும் ஜீவகாருண்ய சிந்தனைகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு ‘நிரவி யங் இந்தியா நற்பணி மன்றம்’ முழு உபயம் ஏற்று விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில் நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பசிப்பிணி போக்கும் வழியைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அன்னதான நிகழ்வில், யங் இந்தியா நற்பணி மன்ற நிர்வாகிகள், சன்மார்க்க சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன