காரைக்கால்

காரைக்கால்: நெடுங்காடு-கோட்டுச்சேரி எம்.எல்.ஏ டாக்டர் விக்னேஸ்வரன் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

காரைக்கால்:
நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் மருத்துவருமான டாக்டர் வி. விக்னேஸ்வரன் எம்.பி.பி.எஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோட்டுச்சேரிமேட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் தொடக்கமாக கோட்டுச்சேரிமேடு அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு புதிதாக பள்ளியின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை, வகுப்பறைகளுக்குத் தேவையான மின்விசிறிகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பல்வேறு அடிப்படை உபகரணங்கள் முறைப்படி வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் வழங்கி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன