புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி வெப்காஸ்டிங்; புகார் எண்கள் அறிவிப்பு!

புதுச்சேரி, 05/10/2026:

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடப்பதை உறுதிசெய்ய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரலை கண்காணிப்பு (Web Casting) வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தலா இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 05.10.2026 பிற்பகல் 3:00 மணி முதல் நேரலைக் கண்காணிப்பு முழுவீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேர்தல் விதிமீறல் புகார்களை பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 0413-2299558 என்ற எண்ணிலும், துணை மாவட்டத் தேர்தல் அதிகாரி திரு. எஸ். கண்ணபிரானை 9443375089 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக கள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன