காரைக்கால்

காரைக்கால் வரிச்சிக்குடி – தேவனூர் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் வசதி: எம்எல்ஏ டாக்டர் விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு செய்து உறுதி!

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட வரிச்சிக்குடி – தேவனூர் சாலை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் அடிப்படை வசதிக் குறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் நேரில் முறையிட்டு மனு அளித்தனர்.

வரிச்சிக்குடி – தேவனூர் சாலையில் வசிக்கும் குடியிருப்போர் திரு. கணபதி, திரு. மாரியப்பன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள், நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, தங்களது பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்கவும் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், உடனடியாக வரிச்சிக்குடி – தேவனூர் சாலை பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். கழிவுநீர் தேங்கும் இடங்கள் மற்றும் சாலையின் கட்டமைப்பு நிலவரங்களைப் பார்வையிட்ட அவர், துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களின் நீண்ட நாள் தேவையாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும், உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதியில் மக்கள் நலப்பணிகளையும் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்து வரும் சட்டமன்ற உறுப்பினர், மக்களின் தேவைகளை உடனுக்குடன் கேட்டறிந்து களத்தில் இறங்கி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன