புதுச்சேரி

புதுச்சேரி: ரூ.29 லட்சத்தில் உப்பனாறு தூர்வாரும் பணி தீவிரம் – எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, அக். 22: மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள உப்பனாறு பிரதான மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தின் சார்பில் ரூ.29 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மறைமலை அடிகள் சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதி எம்.எல்.ஏ. நேரு பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

காமராஜர் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரையிலான பகுதியில் ஓராண்டு காலத்திற்கு வாய்க்காலைத் தூர்வாரி, புதர்களை அகற்றி பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாய்க்காலில் உள்ள அடைப்புகள் மற்றும் சகதிகளை அகற்றுவதன் மூலம், உருளையன்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி கடலில் கலக்க வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் லூயிபிரகாசம் நிக்கோ, இளநிலைப் பொறியாளர் கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பணிகளைப் பார்வையிட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன